யாழ். வல்வெட்டித்துறையில் இடம்பெற்ற தலைவர் பிரபாகரனின் பிறந்ததினம்
யாழில் (Jaffna) தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் (Velupillai Prabhakaran) 70 ஆவது பிறந்த தினக் கொண்டாட்டம் இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் - வல்வெட்டித்துறையில் உள்ள அவருடைய இல்லத்தில் இன்று (26) வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவிஜிலிங்கம் (M.K Shivajilingam) மற்றும் அப்பிரதேச மக்கள் ஒன்று திரண்டு பிரபாகரனுக்கு கேக் வெட்டியும், இனிப்பு மற்றும் மரக் கண்றுகள் வழங்கியும் பிறந்த தினத்தைக் கொண்டாடினர்.
காவல்துறையினர் தெரிவிப்பு
பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக தலைவர் வே.பிரபாகரனின் புகைப்படத்தினை கொண்ட பதாகை ஒன்றும் அச்சிடப்பட்டு அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
இதன்போது அங்கு வந்திருந்த வல்வெட்டித்துறை காவல்துறையினர் தலைவருடைய புகைப்படத்தினை பயன்படுத்த முடியாது என்றும், அதற்கு சட்டத்தில் இடமில்லை என்று தெரிவித்திருந்தனர்.
இருப்பினும் அந்த புகைப்படத்தினை நீக்கிவிட்டு உங்களுடைய விருப்பத்திற்கு ஏற்ப பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்விவுகளை நடத்துங்கள் என்று பொது மக்களிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
70 மரங்கள் நடப்பட்டன
இந்தநிலையில் அந்தக் கோரிக்கையினை ஏற்ற மக்கள் தலைவர் பிரபாகரனின் படத்தினை அகற்றிவிட்டு சிறப்பான முறையில் பிறந்த தின நிகழ்வினை நடத்தினர்.
மேலும் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 70 ஆவது பிறந்த தினத்தை பிரதிபலிக்கும் வகையில் அவருடைய வீட்டு வளாகத்திற்குள் சிறுவர்கள் மற்றும் பொது மக்களால் 70 மரங்கள் நடப்பட்டன.
இதுமட்டுமல்லாமல் 70 மாணவர்களுக்கான கல்வி உபகரணங்கள் மற்றும் 70 தென்னை மரக் கன்றுகள் என்பனவும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |