நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு பிடியாணை : நீதிமன்றம் உத்தரவு
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு (Ramanathan Archchuna) பிடியாணை பிறப்பிக்குமாறு கொழும்பு (Colombo) மேலதிக நீதவான் மஞ்சுளா ரத்நாயக்க (Manjula Rathnayake) உத்தரவிட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் (Jaffna) சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் ஊடாக அர்ச்சுனாவிற்கு பிடியாணை பிறப்பிக்குமாறு இன்று (26) உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு - பேஸ்லைன் வீதியில் 2021ஆம் ஆண்டு மார்ச் 22ஆம் திகதி அர்ச்சுனா இன்னுமொரு மகிழுந்துடன் மோதி விபத்தை ஏற்படுத்தியதுடன், வாகன சாரதியைத் தாக்கிக் கடுமையாகக் காயப்படுத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
வழக்கு விசாரணை
இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு இன்று (26) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சந்தேகத்திற்குரிய இராமநாதன் அர்ச்சுனா தொடர்ந்தும் வழக்கு விசாரணைகளில் முன்னிலையாவதைத் தவிர்த்து வருவதனால் அவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் (CID) பல முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |