விடுதலைப் புலிகளின் தலைவரின் மரணம் -யாழில் மைத்திரி வெளியிட்ட முக்கிய தகவல்

Maithripala Sirisena LTTE Leader
By Sumithiran Jul 02, 2023 10:42 AM GMT
Report

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரணம் தொடர்பாக பதில் பாதுகாப்பு அமைச்சராக இருந்த போது தமக்கு எதுவும் அறிக்கையிடப்படவில்லை என முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அத்துடன் பிரபாகரனின் மரபணுப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டமை தொடர்பாகவும் தாம் அறிந்திருக்கவில்லை என யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மரபணுப் பரிசோதனை

விடுதலைப் புலிகளின் தலைவரின் மரணம் -யாழில் மைத்திரி வெளியிட்ட முக்கிய தகவல் | Ltte Leader S Death Important Information Maithiri

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரபணுப் பரிசோதனைக்காக இராணுவத்தால் மாதிரி எடுக்கப்பட்டு, இறுதி யுத்தத்தில் மீட்கப்பட்ட உடல் அவருடையதே என உறுதி செய்யப்பட்டதாக சிறிலங்கா இராணுவம் கூறியிருந்தது.

எனினும் அது தொடர்பான தகவல்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம்பெறுவதற்கு முயற்சித்த போதிலும் அதனை இராணுவத்தினர் மறுத்திருந்தனர்.

இறுதி யுத்தம் இடம்பெற்ற காலப் பகுதியில் பாதுகாப்பு அமைச்சராக இருந்தவர் என்ற அடிப்படையில் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரபணுப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டமை தொடர்பாக மைத்திரிபால சிறிசேனவிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

இதற்கு பதில் அளித்த மைத்திரிபால சிறிசேன, உண்மையில் தாம் இறுதி இரண்டு வாரங்களே பதில் பாதுகாப்பு அமைச்சராக இருந்ததாகவும் இந்த மரபணு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டமை தொடர்பாக அன்று தாம் அறிந்திருக்கவில்லை எனவும் இன்றும் அது தொடர்பாக எதுவும் தமக்கு தெரியாது எனவும் கூறியுள்ளார்.

எனினும் தாமே இறுதி யுத்தத்தை நடத்தியதாகவும் விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் தமக்கே பாரிய பங்கு உள்ளதாகவும் அதிபராக இருந்த போது, மைத்திரிபால சிறிசேன கூறியமை தொடர்பாகவும் ஊடகவியலாளர்கள் மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அதிபராக இருந்த போது இலங்கையின் சுதந்திர தின உரையிலும் மைத்திரிபால சிறிசேன, இந்த விடயத்தை கூறியிருந்ததையும் யாழில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

யுத்தத்தில் தலைவர் கொல்லப்பட்டாரா

விடுதலைப் புலிகளின் தலைவரின் மரணம் -யாழில் மைத்திரி வெளியிட்ட முக்கிய தகவல் | Ltte Leader S Death Important Information Maithiri

இதற்கு பதில் அளித்த மைத்திரிபால சிறிசேன, அப்போதைய அதிபராக இருந்த மஹிந்த ராஜபக்ச, வெளிநாட்டில் இருந்த போதிலும் பாதுகாப்பு சார்ந்த உத்தரவுகளை அவரே வழங்கியிருந்தார் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் யுத்தத்தை வழிநடத்திய விடயத்தில் தமக்கு எந்தவொரு தொடர்பும் இருக்கவில்லை எனவும் முன்னாள் அதிபர் சுட்டிக்காட்டியுள்ளாார்.

தம்மிடம் பொறுப்புகளை கையளித்துவிட்டு அதிபர் அப்போது வெளிநாடு சென்றிருந்தார் எனவும் முன்னெடுக்கப்பட்டுவந்த செயற்பாடுகளை தாம் தொடர்ந்ததாகவும் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

இறுதி யுத்தத்தில் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என மீண்டும் ஊடகவியலாளர் கேள்வி எழுப்பினார்.

வேலுப்பிள்ளை பிரபாகரனின் உயிரிழப்பு தொடர்பாக எந்தவொரு விடயமும் தமக்கு அறிக்கையிடப்படவில்லை என மைத்திரிபால சிறிசேன மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014