தனது முதலாவது வெற்றியை பதிவு செய்தது லக்னோ

Lucknow Super Giants Punjab Kings IPL 2024
By Kathirpriya Mar 31, 2024 05:05 AM GMT
Report

லக்னோவில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கும் இடையே இடம்பெற்ற லீக் ஆட்டத்தில் தனது முதலாவது வெற்றியை லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி பதிவு செய்துள்ளது.

17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் லக்னோவில் நேற்று (31) நடைபெற்ற லீக் ஆட்டத்தில் நாணயசுழற்சியில் வென்ற லக்னோ அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. அதன்படி தொடக்க வீரர்களாக குயின்டன் டி கொக் , கே.எல். ராகுல் ஆகியோர் களமிறங்கினர்.

தொடக்கத்தில் கே.எல்.ராகுல் 15 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்த நிலையில், தொடர்ந்து வந்த வீரர் 9 ஓட்டங்களில் வெளியேறினார். பின்னர் வந்த ஸ்டாய்னிஸ் 19 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். மறுபுறம் டி கொக் சிறப்பாக நிலைத்து ஆடி ஓட்டங்களை குவித்த அவர் அரைசதமடித்த நிலையில் ஆட்டமிழந்தார், அவரைத் தொடர்ந்து களமிறங்கிய நிக்கோலஸ் பூரன் , குருனால் பாண்டியா இருவரும் இணைந்து அதிரடி காட்டி, பந்துகளை பவுண்டரி, சிக்சர்களாக்கினர்.

ஐபிஎல் தொடரிலிருந்து தொடர்ச்சியாக வெளியேறும் இங்கிலாந்து வீரர்கள்!

ஐபிஎல் தொடரிலிருந்து தொடர்ச்சியாக வெளியேறும் இங்கிலாந்து வீரர்கள்!

தொடக்க ஆட்டக்காரர்கள்

இதனால் லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 199 ஓட்டங்களை குவித்தது. நிக்கோலஸ் பூரன் 21 பந்துகளில் 42 ஓட்டங்களும், குருனால் பாண்டியா 22 பந்துகளில் 43 ஓட்டங்களும் எடுத்தனர் . பஞ்சாப் அணி சார்பில் சாம் கரன் 3 விக்கெட்டும், அர்ஷிதீப் சிங் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர்.

தனது முதலாவது வெற்றியை பதிவு செய்தது லக்னோ | Lucknow Super Giants Registered First Win Ipl 2024

தொடர்ந்து இலக்கை நோக்கி களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் வலுவான அடித்தளம் அமைத்து கொடுத்தனர். தவான் - பேர்ஸ்டோ இருவரும் இணைந்து 102 ஓட்டங்களை பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், பேர்ஸ்டோ 42 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய வீரர்களில் பிரப்சிம்ரன் சிங் 19 ஓட்டங்களுடனும், ஜித்தேஷ் 6 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் தவான் போராடினார். ஆனால் மற்ற வீரர்களில் யாரும் அவருக்கு பெரிய அளவில் ஒத்துழைக்கவில்லை.

கிளாசனுக்கு கிலோ கணக்கில் தங்க சங்கிலி வழங்கியுள்ள ஐதராபாத் அணி: வைரலாகும் புகைப்படம்

கிளாசனுக்கு கிலோ கணக்கில் தங்க சங்கிலி வழங்கியுள்ள ஐதராபாத் அணி: வைரலாகும் புகைப்படம்

முதல் வெற்றி

முடிவில் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 178 ஓட்டங்களை மட்டுமே அடித்தது. இதன் மூலம் 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற லக்னோ 2-வது போட்டியில் விளையாடி முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

தனது முதலாவது வெற்றியை பதிவு செய்தது லக்னோ | Lucknow Super Giants Registered First Win Ipl 2024

பஞ்சாப் தரப்பில் அதிகபட்சமாக தவான் 70 ஓட்டங்கள் அடித்தார். லக்னோ தரப்பில் மயங்க் யாதவ் 3 விக்கெட்டுகளும், மோஷின் கான் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றி போட்டியை நிறைவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.  

ஹர்திக் பாண்டியாவை செருப்பால் அடிக்கும் ரசிகர்கள்..! வைரலாகும் காணொளி

ஹர்திக் பாண்டியாவை செருப்பால் அடிக்கும் ரசிகர்கள்..! வைரலாகும் காணொளி


 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
மரண அறிவித்தல்

சுருவில், வவுனியா

05 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பாவற்குளம், கனடா, Canada

11 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, புங்குடுதீவு 1ம் வட்டாரம், கிளிநொச்சி

05 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

19 Jun, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, Drancy, France

05 Jul, 2020
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், திருகோணமலை, Eastham, United Kingdom

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோப்பாய் வடக்கு, Jaffna, Scarborough, Canada, Whitby, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Gagny, France

03 Jul, 2018
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026