கொத்து பிரியர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்
Sri Lanka
Sri Lankan Peoples
Sri lanka Food Recipes
By Sumithiran
இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மதிய உணவுப் பொதிகள், கொத்து மற்றும் பிறைட் றைஸ் ஆகியவற்றின் விலை 20% குறைக்கப்படும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் (AICOA) இன்று தெரிவித்துள்ளது.
உள்நாட்டில் எரிவாயுவின் விலை குறைவடைந்ததன் காரணமாகவே விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளதாக அதன் தேசிய அமைப்பாளர் அசேல சம்பத் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
தேநீர் விலை
சாதாரண தேநீர் கோப்பையின் விலை 10 ரூபாவால் குறைக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இதன்படி தேநீர் 30 மற்றும் ஒரு கப் பால் டீ ரூ. 90 ஆக விற்பனை செய்யப்படவேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி