பருத்தித்துறை நகரசபை விடுத்துள்ள கடும் எச்சரிக்கை...!

Tamils Jaffna Sri Lanka
By Theepan Dec 22, 2025 10:54 PM GMT
Report

பருத்தி துறையில் லஞ்ச் சீற் பாவனை முற்றாக தடைசெய்யப்படவுள்ளதாக பருத்தித்துறை நகரசபை அறிவித்துள்ளது.

இதனடிப்படையில், வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் இந்நடவடிக்கை நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பருத்தித்துறை நகரசபை பொதுச்சுகாதார பரிசோதகர் ப.தினேஷ் இதனை தெரிவித்துள்ளார்.

யாழில் போதைபொருளுடன் சுற்றிவளைக்கப்பட்ட இளைஞர்

யாழில் போதைபொருளுடன் சுற்றிவளைக்கப்பட்ட இளைஞர்

உணவகங்கள் 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 2026 ஆம் ஆண்டு முதல் உணவகங்கள் மற்றும் உணவு கையாளும் நிலையங்களில் உள்ளக பயன்பாடு மற்றும் உணவு பொதியிடல் உள்ளிட்ட எந்த செயற்பாடுகளின் போதும் லஞ்ச் சீற் பயன்படுத்த முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

பருத்தித்துறை நகரசபை விடுத்துள்ள கடும் எச்சரிக்கை...! | Lunch Sheet Ban In Point Pedro From Jan 1 2026

அவ்வாறு செயற்படுபவர்கள் மீது நீதிமன்றத்தின் ஊடாக நேரடியாக சட்ட நடவடிக்கை மேற்கொள்வதுடன் அதனை மீறி செயற்படும் வியாபார நிலையங்களின் வியாபார உரிமம் நகரபிதாவுக்கு உள்ள அதிகாரத்தின் கீழ் இடைநிறுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

லஞ்ச் சீற் பாவனைக்கு மாற்றீடாக உள்ளக பயன்பாட்டில் வாழை இலை, தாமரை இலை மற்றும் தேக்கம் இலை போன்றவற்றையும் உணவு பொதியிடலின் போது ஈய பேப்பர் மற்றும் உணவு பொதியிடலுக்காக அனுமதிக்கப்பட்ட கொள்கலன்களை பயன்படுத்துமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

மருதங்கேணி காவல் நிலையத்திற்கு புதிய காவல்துறை பொறுப்பு அதிகாரி நியமனம்...!

மருதங்கேணி காவல் நிலையத்திற்கு புதிய காவல்துறை பொறுப்பு அதிகாரி நியமனம்...!

இறைச்சி விற்பனை

அத்தோடு, பருத்தித்துறை நகர சபை எல்லைக்குட்பட்ட உணவகங்களின் பயன்பாட்டிற்கு கொள்வனவு செய்யப்படும் இறைச்சி வகைகளை நகரசபைக்கு உட்பட்ட இறைச்சி கடைகளில் இருந்தே பெற்றுக்கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதன்போது கலால் செய்யப்பட்ட இறைச்சிகளை நகரசபைக்கு வெளியே இருந்துதான் பெற்றுக்கொள்ள கூடியதாக இருப்பதாக முஸ்லிம் உணவக தரப்பினரால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பருத்தித்துறை நகரசபை விடுத்துள்ள கடும் எச்சரிக்கை...! | Lunch Sheet Ban In Point Pedro From Jan 1 2026

இந்தநிலையில், அவ்வாறான சந்தர்ப்பங்களில் அந்தந்த உள்ளுராட்சி மன்றங்களினால் அங்கீகரிக்கப்பட்ட இறைச்சி விற்பனை நிலையங்கள் அல்லது இறைச்சி கூடங்களில் இருந்து கொள்வனவு செய்ய வேண்டும் எனவும் அதற்கான பற்றுச்சீட்டை அவசியம் வைத்திருக்க வேண்டும் எவும் நகரசபை பொதுச்சுகாதார பரிசோதகரினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, கடந்த ஒக்டோபர் முதலாம் திகதி முதல் பருத்தித்துறை நகரசபைக்குட்பட்ட உணவகங்கள் மற்றும் உணவு கையாளும் நிலையங்களில் உள்ளக பயன்பாட்டில் லஞ்ச் சீற் பாவனை தடை செய்யப்பட்டுள்ளதுடன் ஜனவரி முதலாம் திகதி முதல் முற்றுமுழுதான லஞ்ச் சீற் பாவனையை தடைசெய்யும் வகையில் மூன்று மாத கால அவகாசம் பருத்தித்துறை நகர சபையினால் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நுகேகொடையில் துப்பாக்கிச் சூடு...! ஒருவர் படுகாயம்

நுகேகொடையில் துப்பாக்கிச் சூடு...! ஒருவர் படுகாயம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019