வெளிச்சத்துக்கு வந்த கைதிகளின் ஆடம்பர வாழ்க்கை
நீர்கொழும்பு சிறைச்சாலையில் உள்ள கைதிகள் குழுவொன்று ஆடம்பரமான முறையில் விருந்துண்டு மகிழ்வதை சிங்கள இணையத்தளமொன்று வீடியோவாக வெளியிட்டுள்ளது.
நீர் கொழும்பு சிறைச்சாலையின் முன்னாள் கண்காணிப்பாளர் அனுருத்த சம்பாயோவின் காலத்தில், குளிர்சாதன பெட்டிகள் மற்றும் மின்சார அடுப்புகளைப் பயன்படுத்தி உணவு சமைக்கும் கைதிகளின் ஆடம்பரமான வாழ்க்கையின் மற்றொரு அம்சத்தை சிறைக் காவலர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
குறித்த வீடியோவின் பல பகுதிகளில், கைதிகள் கைபேசிகளில் சுதந்திரமாக பேசுவதையும், கைபேசிகளுக்கு ‘சாஜ்’ ஏற்றுவதையும் காணமுடிகிறது. தண்டனை பெற்ற கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைச்சாலையை விட நண்பர்கள் குழுவுடன் கூடிய சிறைச்சாலை போல இந்த காட்சி தோன்றுகிறது.
நீர்கொழும்பு சிறைச்சாலை கண்காணிப்பாளராக பணியாற்றிய அனுருத்த சம்பாயோவின் காலத்தில் நடந்த முறைகேடு குறித்த உண்மைகளை தாம் கண்டு பிடித்துள்ளதாக தெரிவித்துள்ள அந்த இணையத்தளம், அவர் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார் எனவும் தெரிவித்துள்ளது.