யாழ் வரவுள்ள அதிசொகுசு கப்பல் மகிழ்ச்சியில் பயணிகள்
Jaffna
Sri Lanka Tourism
Sri Lanka
By Raghav
இந்தியாவில் இருந்து MV Express(Cordelia Cruises) என்ற அதிசொகுசு சுற்றுலாப் பயணிகள் கப்பல் யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ளது.
குறித்த கப்பல், நாளையதினம்(15.08.2025) யாழ்ப்பாணம் வருகை தரவுள்ளதாக காங்கேசன் துறைமுக அத்தியட்சகர் த.பகீரதன் தெரிவித்துள்ளார்.
10 தளங்களை கொண்ட மிகவும் பிரமாண்டமான இந்த கப்பலானது இந்தியாவில் இருந்து சுமார் 1391 சுற்றுலாப்பயணிகளுடன் புறப்பட்டு அம்பாந்தோட்டை, திருகோணமலை ஊடாக நாளையதினம் காங்கேசன்துறையை வந்தடையவுள்ளது.
சுற்றுலா பயணிகள்
இந்தக் கப்பலில் சுமார் 584 ஊழியர்கள் பணி புரிகின்றனர். குறித்த சுற்றுலா பயணிகள் கப்பலானது, கடந்த 2023ஆம் ஆண்டு 9 தடவைகளும் 2024ஆம் ஆண்டு 6 தடவைகளும் இலங்கைக்கு வந்திருந்தது.
இவ்வாறிருக்க இந்த ஆண்டு நாளை(15) மற்றும் 22ஆம் திகதி ஆகிய இரண்டு தினங்கள் வருகைதரவுள்ளதாக த.பகீரதன் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்