குறுக்கே வர வேண்டாம் - யாழில் எம்.ஏ.சுமந்திரன் பகிரங்க எச்சரிக்கை

Jaffna Akila Ilankai Tamil United Front M A Sumanthiran ITAK
By Thulsi Jun 09, 2025 06:39 AM GMT
Report

யாழில் 17 சபைகளிலும் இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆட்சி அமைக்கும் என அக்கட்சியின் பதில் பொது செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் (M. A. Sumanthiran) தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில் யாழ்ப்பாண (Jaffna) மாவட்டத்தில் 17 உள்ளூராட்சி சபைகளிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் நடைபெற்ற போதே இதனைத் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், ஏனைய கட்சிகள் போன்று ஒரு சந்திப்புக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு பின்னர் அனைவருக்கும் தெரிந்த பின்பு மறுக்கும் அல்லது சந்திப்புகளை பிற்போடும் செயற்பாடுகள் தமிழரசுக் கட்சிக்குள் (ITAK) நடைபெறுவதில்லை.

திருமலையில் தமிழரசுக் கட்சி உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம்

திருமலையில் தமிழரசுக் கட்சி உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம்

சமஸ்டி அடிப்படையில் ஆட்சி அதிகாரங்கள்

சமஸ்டி அடிப்படையில் ஆட்சி அதிகாரங்கள் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதற்காகவே எமது கட்சி உருவாக்கப்பட்டது.

குறுக்கே வர வேண்டாம் - யாழில் எம்.ஏ.சுமந்திரன் பகிரங்க எச்சரிக்கை | Ma Sumanthiran Challenge Tamil Political Parties

அதற்காகவே அனைத்து தேர்தல்களிலும் போட்டியிடுகின்றோம். 1956ம் ஆண்டு முதல் இன்றுவரை தமிழ் மக்கள் பிரதானமாக நம்புவது இலங்கைத் தமிழரசுக் கட்சியை மட்டும் தான்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் பின்னரும் மக்களது ஆணைக்கு நாங்கள் தலை வணங்குகிறோம் என வெளிப்படையாக சொன்னேன். மக்கள் தவறாக முடிவெடுப்பதில். என்பிபி வாக்களித்த விவகாரத்தில் கூட அது மக்களுடைய தீர்ப்பு.

தமிழரசுக் கட்சிக்கு ஆதரவு வழங்க மாட்டோம் : அடித்துக்கூறும் அநுர தரப்பு

தமிழரசுக் கட்சிக்கு ஆதரவு வழங்க மாட்டோம் : அடித்துக்கூறும் அநுர தரப்பு

தும்புக்கட்டை கதை

அரசாங்கம் உட்பட அனைத்துக் கட்சிகளுக்கும் மக்களது தீர்ப்பினை மதிக்குமாறு நீண்டகாலமாக நாங்கள் கோரி வருகின்றோம். ஒரு குறிப்பிட்ட சபையில், தமிழரசுக் கட்சி அதிக ஆசனங்களைப் பெற்றிருந்தால் மக்களின் ஆணையை மதித்து இலங்கைத் தமிழரசுக் கட்சி அந்த சபையில் ஆட்சியமைக்க ஆதரவளிக்க வேண்டியது உங்களுடைய ஜனநாயகக் கடமை.

குறுக்கே வர வேண்டாம் - யாழில் எம்.ஏ.சுமந்திரன் பகிரங்க எச்சரிக்கை | Ma Sumanthiran Challenge Tamil Political Parties

இதனை நாங்கள் 2018ம் ஆண்டிலேயே சொல்லியிருக்கிறோம். சந்திப்புகள் தொடர்பாக சில உணர்வுபூர்வமான விடயங்கள் இருக்கின்றன நாங்கள் அதனை மதிக்கின்றோம். அதனைப் புறம் தள்ளவில்லை.

கஜேந்திரகுமாருடனான சந்திப்பு அவரது வீட்டிலேயே ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. நானும் அதற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை. அனாலும் அவர் இடையில் தும்புக்கட்டை கதை ஒன்றைக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த விவகாரம் எமது கட்சிக்குள் ஒரு சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. எனவே நாம் சந்திப்புக்கான இடத்தை மாற்றியிருந்தோம். எனவே சந்திப்புக்கான இடம் குறித்த விவகாரத்தில் மக்களுக்கு ஒரு உணர்வுபூர்வமான தாக்கம் ஏற்பட்டிருந்தால் அத்தனையும் நாம் ஏற்றுக்கொள்கிறோம். ஒட்டுமொத்தமாக இந்த விடயத்தைப் பார்க்கின்றபோது நாங்கள் யாருடனும் கூட்டாட்சி அமைக்கவில்லை.

சி.வி.கே பலிக்கடா..! சுமந்திரனின் இரட்டை முகம்: சாணக்கியனுக்காக இரகசியமாய் நகர்த்தப்படும் காய்

சி.வி.கே பலிக்கடா..! சுமந்திரனின் இரட்டை முகம்: சாணக்கியனுக்காக இரகசியமாய் நகர்த்தப்படும் காய்

தமிழ்த் தேசியத்தை நிமிர வைத்திருக்கிற ஒரே கட்சி

மக்கள் எமக்கு வழங்கிய ஆணையின் பிரகாரம் நாங்கள் அதிகாரத்தை கோருகின்ற அரசியற் கட்சி. அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான ஆணையை மக்கள் வழங்கிய பிறகு அதற்கு குறுக்கே எவரும் வரவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கிறோம்.

யாழில் உள்ள 17 சபைகளில் ஒன்றிரண்டு சபைகளில் எமக்கு பெரும்பான்மை இல்லாமல் இருக்கலாம். நாங்கள் சொன்ன கோட்பாட்டை ஏற்றுக்கொண்டதாக சொல்லிவிட்டு, அதனை மறுதலிப்பதற்காக கபடத்தனமாக பலர் செயற்படும் காரணத்தால், 17 சபைகளிலும் நாங்கள் ஆட்சி அமைப்போம்.

குறுக்கே வர வேண்டாம் - யாழில் எம்.ஏ.சுமந்திரன் பகிரங்க எச்சரிக்கை | Ma Sumanthiran Challenge Tamil Political Parties

மக்களின் ஆணை இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்தத் தடவை தேசிய மக்கள் சக்தியை விட கூடுதலாக எடுக்கும் வகையில் மக்கள் மாற்றியமைத்திருக்கிறார்கள்.

ஏனையவர்களால் தேசிய மக்கள் சக்தியை மேவி வர முடியவில்லை. தமிழா மக்களை, தமிழ்த் தேசியத்தை நிமிர வைத்திருக்கிற ஒரே கட்சி இலங்கைத் தமிழரசுக் கட்சி.

அவ்வகையிலான மக்கள் ஆணையை பெற்ற நாங்கள் எல்லா சபைகளிலும் நிர்வாகத்தை அமைப்பதற்கான உரித்துடையவர்கள். அதற்கு குறுக்கே எவரும் வர வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கிறோம் எச்சரிக்கை விடுக்கின்றோம் எனத் தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!          


ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Toronto, Canada

31 Oct, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Jaffna, வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Northolt, United Kingdom

28 Oct, 2025
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, வெள்ளவத்தை, Pinner, United Kingdom

24 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வெள்ளவத்தை

30 Oct, 2017
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், வட்டகச்சி, பேர்ண், Switzerland, பரிஸ், France

11 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை

26 Oct, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 6ம் வட்டாரம், சென்னை, India

31 Oct, 2024
நன்றி நவிலல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன் மேற்கு, கரம்பன், கொழும்பு, சுவிஸ், Switzerland, கொழும்பு சொய்சாபுரம்

01 Nov, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, சரவணை மேற்கு, வெள்ளவத்தை

31 Oct, 2014
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, வெள்ளவத்தை

01 Nov, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெல்லியடி, London, United Kingdom

03 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Hannover, Germany

30 Oct, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
நன்றி நவிலல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, வள்ளிபுனம்

30 Sep, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கொழும்பு

26 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Den Helder, Netherlands

21 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
11ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024