சாள்ஸ் நிர்மலநாதன் தலைமையில் மன்னாரில் மாவீரர் நினைவேந்தல் (படங்கள்)
mannar
memorial
maveerar nal
By Vanan
சாள்ஸ் நிர்மலநாதன் தலைமையில் மன்னாரில் மாவீரர் நினைவேந்தல் இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் மாவட்ட அலுவலகத்தில் இன்று மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு உணர்வுபூர்வமாக இடம் பெற்றது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தலைமையில் குறித்த நினைவேந்தல் நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டு இடம்பெற்றது.
இதன் போது தாயக விடுதலைக்காக உயிர் நீத்த வீரர்களுக்கு சுடர் ஏற்றி மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
இவ் நினைவேந்தல் நிகழ்வுகளில் தமிழரசுக் கட்சியின் உள்ளூராட்சி மன்றப் பிரதிநிதிகள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டு மாவீரர்களை நினைவு கூர்ந்தனர்.


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்