மாவீரர் நாளை முன்னிட்டு அரசியல் பிரமுகர்கள் வெளியிட்டுள்ள செய்திகள்!
மாவீரர் நாளை முன்னிட்டு அரசியல் பிரமுகர்கள் தமது செய்திகளை வெளியிட்டுள்ளனர். தமிழ் மக்களின் உரிமைக்காக உலகவாழ் தமிழ் மக்கள் அனைவரும் ஓரணியில் திரளவேண்டும் என இதன்போது அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
உலகளாவிய தமிழ்த் தேசிய அரசியல் பேரியக்கம், தேர்தல் அரசியலுக்கு அப்பாற்பட்ட வகையில் காலத்தின் தேவை என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.
தற்போதைய பல்துருவ உலக ஒழுங்குக்கு மத்தியில் சிறிலங்கா அரசாங்கத்தின் தமிழ் இனவழிப்பு முயற்சியினைத் தடுத்து நிறுத்தி தமிழீழ மக்களின் தன்னாட்சி உரிமைக்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல தாயக மக்கள், புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள், மற்றும் தமிழக மக்கள் உட்பட்ட உலகத் தமிழ் மக்கள் ஓரணியில் அணிவகுத்து நின்று செயற்படுவது அவசியமானது எனவும் அவர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேபோல தமிழகத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் விடுத்துள்ள அறிக்கையில்,
இலங்கைத் தமிழரின் பிரச்சனைக்கு தனித் தமிழீழமே தீர்வு என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவுனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். ஈழத்தமிழர் உரிமைப் போரில் இந்தியாவின் நிலைப்பாட்டை சாதகமானதாக மாற்றுவதே தமிழக மக்கள் முன்பாக உள்ள கடமை எனவும் அவர் கூறியுள்ளார்.