பற்றி எரியும் பிரான்ஸ்: உள்துறை அமைச்சரின் பதவி விலகலை நிரகரித்தார் ஜனாதிபதி மக்ரோன்
பிரான்ஸ் முழுவதும் போராட்டம் தீவிரமடைந்து வரும் சூழலில் உள்துறை அமைச்சர் லாரன்ட் நூன்ஸின் பதவி விலகலை ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் நிராகரித்துள்ளார். நாட்டில் அமைதியை நிலைநாட்டவும், காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படைகளிடையே வலுவான தலைமை மற்றும் தொடரைப் பராமரிக்கவும் நூன்ஸின் பதவிக்காலம் தொடர்வது அவசியம் என்று ஜனாதிபதியின் அதிகாரபூர்வ இல்லம் தெரிவித்துள்ளது.
கொள்ளையர்கள் மற்றும் தாக்குதல் நடத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க, புதிய, மேலும் வலுவான திட்டங்களை அவசரமாக வகுக்குமாறு ஜனாதிபதி மக்ரோன் உள்துறை அமைச்சரை கேட்டுக்கொண்டுள்ளார்.
வன்முறை மூலம் அமைதியைச் சீர்குலைப்பதை ஏற்க முடியாது
இதனிடையே உள்துறை அமைச்சர் லாரன்ட் நுனேஸ் பேசுகையில், ``போராட்டம் நடத்துவது என்பது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமை. ஆனால், வன்முறை மூலம் திட்டமிட்டு அமைதியைச் சீர்குலைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது" என தெரிவித்துள்ளார்.

பிரான்சில் விலைவாசி உயர்வு, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு பொது சேவைகள் மற்றும் பள்ளிகளின் மோசமான நிலையை கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |