உயிரிழந்த பெண்ணின் வங்கிக்கணக்கில் இருந்து 40 கோடி ரூபா மோசடி..! சூத்திரதாரிகளான இலங்கையர்கள்

Sri Lanka Sri Lankan Peoples Madras High Court
By Kiruththikan Oct 08, 2022 03:34 AM GMT
Report

பிணை

மும்பையில் உயிரிழந்த பெண் ஒருவரின் வங்கிக் கணக்கில் இருந்து போலி ஆவணங்களைத் தயாரித்து 40 கோடி ரூபாவை திருட முற்பட்ட இலங்கையர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் பிணை வழங்க மறுத்துள்ளது.

மும்பை வங்கிக் கணக்கில் வைப்பு செய்யப்பட்டிருந்த 40 கோடி ரூபாயை மோசடி செய்து எடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு சட்டபூர்வ பிணை வழங்க மறுத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

போலியாக பெறப்பட்ட ஆவணங்கள் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மும்பை கோட்டை கிளையில், சேமிப்புக் கணக்கில் ஹமிதா ஏலால்ஜி என்பவர், 40 கோடி ரூபாய் பணத்தை வைப்பு செய்திருந்தார்.

கையாடல் செய்ய முடிவு செய்த இலங்கையர்

உயிரிழந்த பெண்ணின் வங்கிக்கணக்கில் இருந்து 40 கோடி ரூபா மோசடி..! சூத்திரதாரிகளான இலங்கையர்கள் | Madras Court Rejects Default Bail To Sri Lankans

எனினும் குறித்த பெண் இறந்து விட்டதால், அந்த வங்கிக் கணக்கு கையாளப்படாமல் இருந்து வந்தது.

இதை தெரிந்துகொண்ட ஐரோப்பாவில் வசிக்கும் உமா காந்தன் என்பவர், அத்தொகையை கையாடல் செய்ய முடிவு செய்தாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தப் பணத்தை கைப்பற்றுவதற்காக இலங்கை தமிழரான லட்சுமணன் மேரி ஃப்ரான்சிஸ்கா என்பவரை இந்தியாவிற்கு சென்று ஆதார் அட்டை, கடவுச் சீட்டு போன்றவற்றைப் பெற்றுள்ளார்.

அவருடன் கென்னிஸ்டன் ஃபெர்னாடோ, பாஸ்கரன், ஜோன்சன் சாமுவேல், தர்மேந்திரன், மோகன் ஆகியோர் இணைந்து, ஹமிதாவின் பொது அதிகாரம் பெற்றதாக போலி ஆவணங்களை தயாரித்து, 40 கோடி ரூபாயை எடுக்க முயற்சித்தனர்.

ஆனால், போலி கடவுச் சீட்டு வழக்கில் லட்சுமணன் மேரி ஃப்ரான்சிஸ்கா உள்ளிட்ட ஆறு பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு எதிராக சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

தாக்கல் செய்யப்படாத குற்றப் பத்திரிகை

உயிரிழந்த பெண்ணின் வங்கிக்கணக்கில் இருந்து 40 கோடி ரூபா மோசடி..! சூத்திரதாரிகளான இலங்கையர்கள் | Madras Court Rejects Default Bail To Sri Lankans

தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்ட இந்த வழக்கில் 90 நாட்களில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படாததால், அரசுத் தரப்பு அறிக்கையை ஏற்று, மேலும் 90 நாட்கள் கால அவகாசம் வழங்கி, செங்கல்பட்டு முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதற்கிடையில், இந்த வழக்கு பூந்தமல்லியில் உள்ள என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்ட நிலையில், நீதிமன்ற காவலை நீட்டித்து செங்கல்பட்டு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையும், சட்டபூர்வ பிணை வழங்க மறுத்து சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையும் ரத்து செய்தது.

தங்களுக்கு சட்டபூர்வ பிணை வழங்கக் கோரி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கென்னிஸ்டன் ஃபெர்னாடோ, பாஸ்கரன் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் டீக்காராமன் அமர்வு, சிறப்பு நீதிமன்றத்தில் என்.ஐ.ஏ அமைப்பினர், கடந்த மார்ச் 29ம் திகதி குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

இந்த நிலையில், சட்டபூர்வ பிணை வழங்க மறுத்து சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து கடந்த ஏப்ரல் மாதம் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறி, மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

ReeCha
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

18 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026