மதுரோ கைதால் அதிரும் வெனிசுலா! பிரித்தானியாவின் அவசர அறிவிப்பு
வெனிசுலாவுக்கான அனைத்து பயணங்களுக்கும் எதிராக பிரித்தானியா வெளியுறவு அலுவலகம் விசேட அறிவித்தல் ஒன்றை வழங்கியுள்ளது.
இதன்படி குறித்த அறிவித்தல் மூலம் வெனிசுலாவுக்கான பயண ஆலோசனையை பிரித்தானியா வெளியுறவு அலுவலகம் புதுப்பித்துள்ளது.
மேலும் பிரித்தானியா மக்கள் அந்த நாட்டிற்கு பயணம் செய்வதை தவிர்க்குமாறு கடுமையான நிபந்தனைகளுடன் அறிவுறுத்தியுள்ளது.
பயணக் காப்பீடு
ஏற்கனவே அங்கு இருப்பவர்கள் பாதுகாப்பான தங்குமிடங்களுக்கு செல்லுமாறும், ஆனால் தேவைப்பட்டால் திட்டங்களை விரைவாக மாற்றத் தயாராக இருக்க வேண்டும் என்றும் அமைச்சகம் கூறியுள்ளது.

ஆலோசனை வழங்கியப்பின்னரும் மக்கள் பயணம் செய்தால் பயணக் காப்பீடு செல்லாததாகிவிடும் என்றும் பிரித்தானியா எச்சரிக்கை விடுத்துள்ளது.
தனிநபர்கள் தங்கள் பயண விருப்பங்களைக் கண்காணிக்க வேண்டும். மேலும் அரசாங்கத்தின் ஆதரவைச் சார்ந்து இல்லாத "தனிப்பட்ட அவசரத் திட்டத்தை" வைத்திருக்க வேண்டும் என்றும் அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
மேலும், வான்வழித் தாக்குதல்கள், எல்லைகள் மற்றும் வான்வெளியை மூடுவதற்கு வழிவகுக்கும் என்றும் பிரித்தானியா எச்சரித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |