ஆபத்தான முன்னுதாரணம் : சர்வதேசத்திற்கு மதுரோவின் மகன் விடுத்த எச்சரிக்கை
அமெரிக்காவால் கைது செய்யப்பட்ட வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவின் மகனும், வெனிசுலா நாடாளுமன்ற உறுப்பினருமான நிக்கோலஸ் எர்னஸ்டோ மதுரோ குவேரா நேற்று(06) வெனிசுலா நாடாளுமன்றத்தில் சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ கடத்தப்பட்ட பின்னர் முதல் முறையாக நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், அமெரிக்காவால் மேற்கொள்ளப்பட்ட சட்டவிரோத நடவடிக்கை சர்வதேச சமூகத்திற்கு ஒரு ஆபத்தான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ளது என தெரிவித்துள்ளார்.
இன்று எமக்கு நாளை யாருக்கு..!
ஒரு நாட்டின் தலைவரைக் கடத்துவதை எந்த நாடும் ஒரு சாதாரண நிகழ்வாகக் கருத முடியாது என்றும், இன்று வெனிசுலா எதிர்கொள்ளும் விதி நாளை வேறொரு நாட்டிற்கு ஏற்படக்கூடும் என்றும் எச்சரித்தார்.

மதுரோவின் மகன், அமெரிக்கா தனது பெற்றோரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் தனது பெயரைச் சேர்த்ததை வன்மையாகக் கண்டிப்பதாகவும் கூறினார்.
தனது தந்தைக்கு ஒரு செய்தியை அனுப்பி தனது உரையை முடித்த அவர்,தந்தை திரும்பும் வரை தங்கள் கடமையை தாம் தொடர்ந்து நிறைவேற்றுவார்கள் என்று கூறியதாக மேலும் தெரிவிக்கப்பட்டது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |