மதுரோவை அமெரிக்க இராணுவம் கொன்றிருக்கலாம்! ட்ரம்ப் வெளிப்படை
அமெரிக்க இராணுவம் இரவு முழுவதும் நடத்திய தாக்குதல் நடவடிக்கையின் போது வெனிசுலா தலைவர் நிக்கோலஸ் மதுரோவைக் கொன்றிருக்கலாம் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கிய அவர்,
“வெனிசுலா தலைவர் நிக்கோலஸ் மதுரோ ஒரு பாதுகாப்பான இடத்திற்குள் செல்ல முயன்றார்.
மிக வேக செயற்பாடு
உங்களுக்குத் தெரியும், எமது இராணுவம் மிக வேகமாக செயற்பட்டதால் அவரால் அங்கு செல்ல முடியவில்லை.

அமெரிக்க இராணுவம் எதிர்ப்பாளர்களை அவ்வளவு வேகமாகக் கடந்து சென்றது. அதே நேரத்தில் நிறைய எதிர்ப்புக்கள் இருந்தன. நிறைய துப்பாக்கிச் சூடு நடந்தது.
முக்கிய விடயம் என்னவென்றால் மதுரோ யுஎஸ்எஸ் இவோ ஜிமா கப்பலில் தற்போது இருக்கிறார்” என்றார்.
Nicolas Maduro on board the USS Iwo Jima. pic.twitter.com/omF2UpDJhA
— The White House (@WhiteHouse) January 3, 2026
மேலும் செய்தியாளர் சந்திப்பு தொடங்குவதற்கு சற்று முன்பு ட்ரம்ப் அமெரிக்க காவலில் இருக்கும் மதுரோவின் படத்தை வெளியிட்டார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |