யாழில் அமைச்சர் டக்ளஸிடம் கையளிக்கப்பட்ட மகஜர்
Indian fishermen
Jaffna
Douglas Devananda
Sri Lanka Fisherman
By Sumithiran
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் மகஜர் கையளிப்பு
தமிழ்நாட்டில் மீன்பிடி தடைக் காலம் நேற்றையதினம் நிறைவடைந்த நிலையில் வடக்கு கடற்பரப்பில் அத்துமீறும் இந்திய இழுவைப் படகுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் இன்று புதன்கிழமை கடற்தொழில் சங்கங்கள் மகஜர் கையளித்தன.
இதன் தொடர்ச்சியாக யாழ் இந்திய துணை தூதரகத்திலும் இந்திய இழுவைப் படகுகளை கட்டுப்படுத்துமாறு கடற்தொழில் சங்கங்கள் மகஜர் கையளித்துள்ளன.
ஏப்ரல் 15 முதல் ஜுன் 14 வரையான 61 நாட்கள் தமிழகத்தில் மீன்பிடித் தடைக்காலமாக அறிவிக்கப்பட்டிருந்தது.
தமிழ்நாட்டில் மீன்பிடி தடைக் காலம்
இந்நிலையில், நேற்றுடன் மீன்பிடி தடைக்காலம் நிறைவடைந்த நிலையில், இன்று முதல் கடலுக்கு செல்வதற்காக இராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் பிரதேச மீனவர்கள் தயாராகி வரும் நிலையிலேயே யாழ்.மாவட்ட மீனவர்கள் மேற்படி மகஜரை கையளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

