பசுபிக் பெருங்கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை
Tsunami
Earthquake
World
By Sathangani
பசுபிக் பெருங்கடலில் அமைந்துள்ள வனுவாட்டு தீவுகளுக்கு அருகே 7.2 மெக்னிடியூட் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இன்று (24) ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தினால் இதுவரை உயிர்ச்சேதமோ அல்லது சொத்துச் சேதமோ ஏற்பட்டதாகத் தகவல்கள் வெளியாகவில்லை.
அத்துடன் நிலநடுக்கத்தின் மையப்பகுதியிலிருந்து 300 கிலோமீற்றர் சுற்றளவில் அமைந்துள்ள கடலோரப் பகுதிகளை ஆபத்தான சுனாமி அலைகள் தாக்கக்கூடும் எனப் பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையம் (Pacific Tsunami Warning Center) எச்சரிக்கை விடுத்துள்ளது.
விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இதையடுத்து, பாதிக்கப்படக்கூடிய கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்