தமிழர் பகுதியில் இடிந்து விழுந்த மகிழவெட்டுவான் பாலம் : அதிகாரிகள் அசமந்தம் - அந்தரிக்கும் மக்கள்
மட்டக்களப்பு (Batticaloa) - வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவிலுள்ள மகிழவெட்டுவான் பாலம் உடைந்து வீழ்ந்து 2 வருடமாகியும் அதனை புனரமைக்காததால் மக்கள் பெரிதும் பாதிப்படைவதாக விசனம் வெளியிட்டுள்ளனர்.
மகிழவெட்டுவான் பாலம் உடைந்துள்ளதன் காரணமாக மட்டக்களப்புக்கும் மகிழவெட்டுவான் பிரதேசத்துக்கும் இடையிலான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதையடுத்து பாடசாலைக்கு செல்லும் மாணவர்கள் பொதுமக்கள் பிரயாணம் செய்ய முடியாது பல்வேறு அசௌகரியங்களை எதிர் நோகி வருவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மகிழவெட்டுவான் நரிப்புதோட்டம், கல்குடா, நெல்லூர் பிரதேசங்களில் இருந்து மட்டக்களப்பு நகருக்கு செல்லும் பிரதான வீதியியிலுள்ள மகிழவெட்டுவான் பாலம் கடந்த 2023 டிசம்பர் மாதம் உடைந்து வீழ்ந்துள்ளது இதனால் மட்டக்களப்பு நகருக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
இதனால் நகரில் இருந்து அந்த பிரதேசத்துக்கு செல்லும் பொது போக்குவரத்து பேருந்துகள் பாலம் ஊடாக செல்ல முடியாது அந்த பாலம் வரை சென்று நிறுத்தப்பட்டதும் பயணிகள் பஸ்வண்டியில் இருந்து இறங்கி பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள், பொதுமக்கள் மூட்டை முடிச்சுக்களுடன் பாலத்தை கடந்து சென்று அங்கிருந்து சுமார் 2 கிலோமீற்றர் தூரம் வரை நடந்து பாடசாலைக்கு மற்றும் வீடு செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் மக்கள் நகரில் இருந்து குற்த பிரதேசங்களுக்கோ அந்த பிரதேசங்களில் இருந்து மட்டக்களப்பு நகருக்கு பிரயாணிக்க வவுணதீவு, ஆயித்தியமலை ஊடாக சுமார் 20 கிலோமீற்றர் தூரம் சுற்றி பிராணிக்க வேண்டியுள்ளது.
இது தொடர்பாக அரசியல்வாதிகள் அரச அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டுவந்து இதுவரை எதுவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொது மக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அரசியல் வாதிகளுக்கு தெரிந்தும் தேர்தல் காலங்களில் வாக்கு கேட்டு வந்த அரசியல்வாதிகள் கூட இதுவரை இந்த பிரதேசத்தில் வாழும் சுமார் 3ஆயிரம் குடும்பங்களின் அடிப்படை வசதியான இந்த போக்குவரத்தை கூட செய்யாது பாராமுகமாக இருக்கின்றனர்.
எனவே இந்த பாலத்தை புனரமைக்காது எந்த அரசியல்வாதிகள் வந்தால் அவர்களை பிடித்து பாலத்தில் கட்டிபோடுவோம் என தெரிவித்துள்ளனர்.
மேலும் இது தொடர்பில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
