மகாகவி பாரதியாரின் நூறாவது நினைவுதினம் யாழில் அனுஷ்டிப்பு
jaffna
memorial
barathi
100th
mahakavi
By Vanan
மகாகவி சுப்பிரமணியப் பாரதியாரின் நூறாவது நினைவு தினம் யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத்தூதரகத்தில் இன்று காலை இடம்பெற்றது.
இதன்போது மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் உருவப்படத்திற்கு யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணைத்துதர் ராகேஷ் நட்ராஜாவால் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
இணையவழியில் இடம்பெற்ற விசேட நிகழ்வில் அரசியல் தலைவர்களும் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
ஒவ்வொரு முறையும் பாரதியாரின் நினைவு தினத்தன்று யாழ்ப்பாணம் அரசடி வீதியில் அமைந்துள்ள பாரதியாரின் சிலைக்கு மரியாதை செய்யும் நிகழ்வு இந்திய துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் இடம்பெறுவது வழமையாகும்.
கொரோனா தனிமைப்படுத்தல் ஊரடங்கு காரணமாக இம்முறை நினைவுதின நிகழ்வுகள் இணையவழியில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.



