ஞானசார தேரருக்கு விடுதலை : அரசிடம் கோரிக்கை விடுக்காத மகா நாயக்கர்கள்
கலகொட அத்த ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் இன்னும் அரசிடம் கோரிக்கை விடுக்கவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இந்த முடிவுகள் குறித்து அமைச்சரவை கலகொட அத்த ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் இன்னும் அரசிடம் கோரிக்கை விடுக்கவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிப்பதற்காக இன்று பிற்பகல் (27) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றபோது அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
சட்டத்தின்படியே அரசு செயல்படும்
மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுத்தாலும், அரசு எப்போதும் நாட்டில் நடைமுறையில் உள்ள சட்டத்தின்படியே செயல்படுவதாக அமைச்சர் கூறினார்.

சட்டத்திற்கு அப்பாற்பட்டு எந்த மாற்றங்களையும் செய்ய அரசு விரும்பவில்லை என்றும் அவர் வலியுறுத்தினார்.
ஞானசார தேரர் தொடர்பாக மகாநாயக்க தேரர்கள் சிறைச்சாலை ஆணையருக்கு முன்னதாக அனுப்பிய கடிதத்தின் அடிப்படையிலேயே சிறைச்சாலை விதிமுறைகள் மாற்றப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |