இந்தியாவில் பச்சிளம் பிஞ்சுகளுக்கு போலியோ சொட்டு மருந்துக்கு பதிலாக சனிடைசரை வழங்கிய சுகாதார ஊழியர்கள்
maharashtra
poliovirus
children suspend
By Vasanth
இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் போலியோ சொட்டு வழங்குவதற்குப் பதிலாக சனிடைசர் வழங்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் நாடு தழுவிய அளவில் கடந்த ஞாயிறுக்கிழமை போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. மகாராஷ்டிரா மாநிலம் யாவத்மால் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில், 12 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்துக்குப் பதில் தவறுதலாக சுகாதார ஊழியர்கள் சனிடைசரை கொடுத்துள்ளனர்.
குழந்தையொன்று வாந்தி எடுக்க, உடனடியாக அருகில் உள்ள அரசாங்க மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது. குழந்தையை பரிசோதித்தபோது சனிடைசர் வழங்கப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக சுகாதார ஊழியர்கள் 3 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில், விசாரணை நடைபெற்று வருகிறது.
4ம் ஆண்டு நினைவஞ்சலி