ஜெனிவா களத்தில் இலங்கையை தவறாக பிரதிபலிக்க சதி? மனோ கணேசன் வெளியிட்ட தகவல்
sri lanka
geneva
un
MAHAVALI PROTEST
By Vanan
ஜெனிவா மனித உரிமை பேரவையின் கவனத்தை ஈர்க்கும் நோக்குடனேயே இலங்கை அரச தலைவரது செயலகத்திற்கு முன்பாக மகாவலி அதிகார சபையின் செயற்பாடுகளுக்கு எதிராக போராட்டம் நடத்தியதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்தார்.
அரச தலைவரது செயலகத்திற்கு முன்பாக நேற்றுமுன்தினம் நடத்தப்பட்ட குறித்த போராட்டம், ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் அரசாங்கத்தை தவறாகப் பிரதிபலிப்பதற்கு திட்டமிட்டுச் செய்யப்பட்ட சதி என அரச தலைவர் அலுவலகம் தெரிவித்திருந்தது.
இது குறித்து ஐ.பி.சி தமிழ் செய்தி பிரிவுக்கு நேற்றைய தினம் கருத்து வழங்கிய மனோ கணேசன்,
வடக்கு கிழக்கில் காணிகளை சுவீகரிக்கும் செயற்பாடுகளை அரசாங்கம் கைவிடும் பட்சத்தில் தமது போராட்டங்களும் நிறுத்தப்படும் எனக் குறிப்பிட்டார்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்