வடக்குக்கு மகாவலிநீர்! வரும்…ஆனால் வராது! தில்லாங்கடி கிவுல் ஓயா பின்னணி!
இந்தியா ஒருபோதும் தனது நாட்டை விட்டு வெளியே அனுப்பாத புத்தரின் புனித சின்னங்களை சுதந்திர தினத்தில் குஜராத்தில் இருந்து இலங்கைக்கு கொண்டுவர வைத்து அதற்கு மறுநாளான 5 ஆம் திகதி முதல் 6 நாட்களுக்கு கொழும்பு கங்காராமய விகாரையில் 24 மணிநேரமும் அதனை காட்சிப்படுத்தும் செயலை செய்து இயலுமானவரை பல்லாயிரக்கணக்கான பௌத்தர்களை அதனை தரிசிக்க வைப்பதன் ஊடாக சிங்களப்பௌத்தர்களின் மனங்களை அனுர அரசாங்கம் வெல்லத்தலைப்படுவது தெரிந்தகதை.
இதனால் இந்த அரசாங்கத்தை ஒரு பௌத்தவிரோத அரசாங்கம் என முத்திரை குத்திய கடும்போக்கு முகங்கள் இப்போது இந்த புள்ளியில் தமது அரச எதிர்ப்பை மேலும் நகர்த்த முடியாமல் விழிப்பதால் மீண்டும் ஒருமுறை திருமலை அடாவடி சிலை புகழ் கஸ்ஸப தேரருடனான 5 பௌத்த பிக்குகள் உட்பட்ட 11 பேருக்கு இன்று மீண்டும் ஒருமுறை தடுப்புக்காவல் நீடிக்கப்பட்டதையும் அவர்கள் சகிக்கவேண்டியதாயிற்று
சிறிலங்கா அரசாங்கத்தைப்பொறுத்தவரை இலங்கையின் அமைவிடம் மற்றும் அதன் தந்ரோபாயங்கள் காரணமான வெளி உதவிகள் கிட்டுகின்றன. நேற்று இந்தியப்பெரியண்ணன் வீட்டில் அரங்கேறிய வரவுசெலவுத்திட்டத்திலும் அயலவருக்கு முன்னுரிமை கொள்கையின் கீழ் இலங்கைக்கு 4 பில்லியன் இந்திய ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நிதிப்பாய்ச்சல்கள் கொழும்புக்கு வரும் நிலையில் மகாவலி ஆற்றுநீரே வடக்குக்கு வராத கிவுல் ஓயா தில்லாலங்கடி அபகரிப்புக்கு எதிரான போராட்டம் நெடுங்கேணியில் இடம்பெற்ற நிலையில் இந்த விடயங்களை மையப்படுத்திவருகிறது செய்திவீச்சு
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |