400 ற்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளுடன் பிறந்தநாள் கொண்டாடிய மகிந்த
முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச 400 ற்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளுடன் தனது 78 ஆவது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.
மகிந்தவின் பிறந்தநாளை ஒட்டி நேற்றையதினம் கம்பஹா மாவட்ட செயலகத்தில் தான நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நிகழ்வு குறித்து எதுவும் தெரியாது
இதன்போது, 420 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு மதிய உணவு, சுகாதாரப் பொருட்கள் மற்றும் 5,000 ரூபாய் நிதியுதவி முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தலைமையில் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வு குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும், வேறு ஒருவர் ஏற்பாடு செய்திருந்த தான நிகழ்வுக்கு தான் வந்ததாக நிகழ்வின் பின்னர் அவர் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.
இதன்போது அவர் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தவை வருமாறு,
ஊடகவியலாளர்கள் - பொதுத் தேர்தலா? ஜனாதிபதி தேர்தலா? வரும்...
மகிந்த - "அதெல்லாம் எனக்குத் தெரியாது. எதுவாக இருந்தாலும் நாங்கள் வெற்றி பெறுவோம்."
ஊடகவியலாளர்கள் - இப்போது எப்படி தயாராக உள்ளீர்களா?
மகிந்த - "நன்றாக தயார் உள்ளோம்."
ஊடகவியலாளர்கள் - கட்சிக்கு தலைவர் ஒருவரை போடுவீர்களா? எங்களுக்கு ஒரு குறிப்பு கொடுக்க முடியுமா?
பட்ஜெட்டில் ஒன்றும் இல்லையே
மகிந்த - "பார்ப்போம். அதை சொன்னால் வௌியே வந்து விடுமே."
ஊடகவியலாளர்கள் - நீங்கள் இருந்த காலத்தை போல பட்ஜெட்டில் ஒன்றும் இல்லையே?
மகிந்த - "எங்களை வேண்டாம் என்றார்கள். இப்போது புதிய குழு வந்துள்ளது. பார்ப்போம்."
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |