மட்டற்ற மகிழ்ச்சியில் மகிந்த: அனுதாபங்களுக்கு பதில் வழங்கிய எம்.பி
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச முன்னர் இருந்ததை விட தற்போது நன்றாகவும், மகிழ்வாகவும் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார்.
மகிந்த ராஜபக்சவுக்கு கொழும்பில் வீடுகளை வழங்க பலரும் முன்வந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மறுசீரமைப்பு திட்டத்தை பதுளை மாவட்டத்தில் ஆரம்பித்து வைத்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தேர்தல் நோக்கங்கள் இல்லை
மேலும் கருத்து தெரிவித்த அவர், இந்த மறுசீரமைப்பு திட்டத்தில் எந்தவொரு தேர்தல் நோக்கங்களும் இல்லை.
சிறிலங்கா சுதந்திர கட்சி சிறிது காலமாகவே மறுசீரமைப்புக்கு உட்படுத்தப்படவில்லை. இதன் காரணமாகவே இந்த வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அனைத்து கட்சிகளிலும் நெருக்கடிகள் காணப்படுகின்றன.
எங்களுடைய சொத்துக்கள் தொடர்பில் ஆராய்வது போல் ஆளும் கட்சி அமைச்சர்களின் சொத்துக்கள் தொடர்பிலும் ஆராய வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
