நாட்டு மக்களுக்கு முக்கிய அறிவிப்பை வழங்கப்போகும் மகிந்த
சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு முக்கிய அறிவிப்பை நாளை (15) வெளியிடுவார் என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
களுத்துறை பகுதியில் இன்று வியாழக்கிழமை (14) இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ அரசியல் ரீதியில் தோற்றுவித்த நெருக்கடிகளினால் பாரிய விளைவுகளை எதிர்கொண்டோம். அரசியலமைப்பின் ஊடாக தீர்வு கண்டுள்ளோம்.
இரண்டாவது தேசிய மாநாடு
கோட்டாபய ராஜபக்ஸ இல்லை என்பதற்காக நாங்கள் அரசியலில் ஈடுபட கூடாது என்பதொன்றும் கட்டாயமல்ல.
பொதுஜன பெரமுனவின் இரண்டாவது தேசிய மாநாடு நாளை தினம் கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இடம்பெறவுள்ளது.

ராஜபக்ஷர்களின் மீளெழுச்சியைக் கண்டு எதிர்க்கட்சியினர் அச்சமடைந்துள்ளார்கள். சமூக வலைத்தளங்களில் வெறுக்கத்தக்க வகையில் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
மகிந்த ராஜபக்ஷ மீது நாட்டு மக்கள் இன்றும் நம்பிக்கை கொண்டுள்ளார்கள். அவரது தலைமைத்துவத்திலான அரசாங்கத்தை கோருகிறார்கள்.
நாளைய தேசிய மாநாட்டில் அவர் முக்கிய செய்தியை நாட்டு மக்களுக்கு வழங்குவார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.