மகிந்தவின் ஒருங்கிணைப்புச் செயலாளர் கைது!! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
இரண்டாம் இணைப்பு
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் ஒருங்கிணைப்புச் செயலாளரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மகிந்தவின் ஒருங்கிணைப்புச் செயலாளரான 53 வயதான நபரொருவர், இன்று(6) கொழும்பில் வைத்து குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைதுசெய்யப்பட்டார்.
கைதான சந்தேகநபர் கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து, அவரை நாளை மறுதினம் (8) வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
அத்துடன், சந்தேகநபரை குறித்த தினத்தில் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்துமாறும் நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
முதலாம் இணைப்பு
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் ஒருங்கிணைப்புச் செயலாளர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மே 9 காலிமுகத்திடல் தாக்குதல் தொடர்பில் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
