மஹிந்தவிடம் இவ்வளவு சொத்துக்களா...!!! அம்பலத்துக்கு வந்த விபரம்
இலங்கையின் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச உட்பட அவரது குடும்பத்தாருக்கு 1000 லட்சம் கோடி சொத்துக்கள் இருப்பதாக ஆனாய்சர்க்கஸ் குழு இணையத்தை மேற்கோள்காட்டி இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கையில் ராஜபக்ச குடும்பத்தின் சொத்துக்கள் மற்றும் மறைத்து வைக்கப்பட்ட சொத்து விபரங்களை உலகப் புகழ்பெற்ற ஆனாய்சர்க்கஸ் குழு இணையத்தில் சிறப்பு ஆவணத்தை வெளியிட்டுள்ளது.
ராஜபக்ச சகோதரர்கள் 14 நாட்களில் நாட்டை விட்டு வெளியேறா விட்டால் அவர்களின் சொத்து விவரம் வெளியிடப்படும் என்ற நிபந்தனை அடிப்படையில் இந்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி, இலங்கையில் நீர்கொழும்பு வீதி வத்தளையில் ரோஹித்த ராஜபக்சவுக்கு சொத்து, கொழும்பில் ஆடம்பர உணவகம், பெரேரா அன்ட் சன்ஸ் உணவு சங்கிலி நிறுவனத்தில் நாமல் ராஜபக்ச 500 மில்லியன் டொலர் முதலீடு. ரிச்சி டீ, மெல்வா சிமெந்து, பிரமிட் வில்வர் நிறுவனம் ஆகியவற்றிலும் ராஜபக்ச குடும்பம் பல கோடி டொலர்களை முதலீடு செய்துள்ளது.
டெம்பிள் குருப், இலங்கை சூப்பர் உணவகங்கள், விஐபி இரவு விடுதிகள், எம்.ஏ.எஸ் ஹோல்டிங்ஸ் கிரிக்கெட் வீரர்களான குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜெயவர்த்தன ஆகியோரின் பெயர்களில் நாடு முழுவதும் நிலம் முதலீட்டு கொள் கொள்முதல், உகண்டா ஏர்லைன்ஸில் 800 மில்லியன் டொலர் முதலீடு, சவூதி இளவரசரிடம் 420 மில்லியன் டொலர் முதலீடு, இங்கிலாந்து கால்பந்து அணியில் பங்கு என அடுக்கடுக்காக முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த மதிப்பீடுகளின்படி ராஜபக்சர்கள் சுமார் ஒரு பில்லியன் டொலர் சொத்துக்களை திருடியுள்ளனர்.
இந்தச் சொத்துக்களில் ஒரு பகுதியை விற்றால்கூட இலங்கையின் பொருளாதார நெருக்கடிகள் தீர்ந்துவிடும் என்று அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்
