மகிந்தவின் கடும் கோபத்திற்கு ஆளாகிய அமைச்சர் அளுத்கமகே
பிரதமர் மகிந்த ராஜபக்சவின்(Mahinda Rajapaksa) கடும் கோபத்திற்கு ஆளாகியுள்ளார் விவசாய அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே(Mahindananda Aluthgamage.).
விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கடுமையாக விமர்சித்துள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கரிம உரத்தை தாம் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என சீன தூதுவரிடம் பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்ததாக வியாழனன்று அளுத்கமகே தெரிவித்த கருத்துக்கே பிரதமர் தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.
தனக்கும் சீனத் தூதுவருக்கும் இடையில் கடந்த புதனன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவ்வாறான கருத்துக்கள் எதனையும் தாம் வெளிப்படுத்தவில்லை எனவும் இந்த சந்திப்பில் அமைச்சர் மகிந்தானந்த பிரசன்னமாகியிருக்காத நிலையில் ஏன் தான் தெரிவிக்காத கருத்தை அவர் தெரிவித்தார் எனவும் பிரதமர் கேள்வி எழுப்பியுள்ளார்.
சீனாவிடம் இருந்து இலங்கைக்கு கடன் வழங்குவது தொடர்பில் இந்த சந்திப்பில் பிரதான கவனம் செலுத்தப்பட்டதாகவும் உர விவகாரம் தொடர்பில் சீன தூதுவருடன் மீண்டும் கலந்துரையாடப்படும் எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.