சிறையிலுள்ள நாமல் ராஜபக்சவை நேரில் சென்று பார்வையிட்டார் மகிந்த ராஜபக்ச
சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நேரில் சென்று சந்தித்துள்ளார்.
நேற்றைய தினம், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்சவை சந்தித்து நலம் விசாரிப்பதற்காக, அவரது தந்தையான முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று (05.09.2026) வெலிக்கடை சிறைச்சாலைக்குச் சென்றுள்ளார்.
அதன்படி, வெலிக்கடை சிறைச்சாலை வளாகத்திற்கு வருகை தந்த முன்னாள் ஜனாதிபதி, சிறை அதிகாரிகளின் அனுமதியுடன் நாமல் ராஜபக்சவை நேரில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
மகனிடம் நலம் விசாரித்த மகிந்த ராஜபக்ச
நாமல் ராஜபக்ச, நேற்றைய தினம் எயார்பஸ் விமானக் கொள்வனவின் போது இலஞ்சம் பெற்றதாக கூறப்படும் குற்றச்சாட்டில், இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையான நிலையில், நீண்ட நேர விசாரணைக்கு பின்னர் கைது செய்யப்பட்டார்.

இதனை தொடர்ந்து நீதிமன்றில் முன்னிலைபடுத்தப்பட்ட அவர், எதிர்வரும் 18ஆம் திகதி வரை கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மேலும் சிறைச்சாலையின் சிறப்பு பாதுகாப்பு அறையில், 10 கைதிகளுடன் பலத்த பாதுகாப்பில் அவர் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 20 Evening