மகிந்தவின் குண்டு துளைக்காத வாகனத்தை மீளப் பெற்றது அரசாங்கம்!
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு வழங்கப்பட்ட குண்டு துளைக்காத வாகனம் இன்று(04) அரசாங்கத்திடம் மீள ஒப்படைக்கப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.
அதன்படி, முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்புப் பணியாளர்களின் பயன்பாட்டிற்கு தற்போது ஒரு வாகனம் கூட இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய சட்டமூலம்
முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகளை நீக்கும் சட்டமூலம் சமீபத்தில் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, முன்னாள் ஜனாதிபதிகளின் ஓய்வூதியத்தைத் தவிர மற்ற அனைத்து சலுகைகளும் நீக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் மனைவியின் ஓய்வூதியம் உட்பட அனைத்து சலுகைகளும் நீக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகளை நீக்கும் சட்டமூலம் நிறைவேற்றப்பட்ட பிறகு, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச 11 ஆம் திகதி கொழும்பில் உள்ள விஜேராம மாவத்தையில் உள்ள அரச குடியிருப்பில் இருந்து தங்காலையில் உள்ள கார்ல்டன் இல்லத்திற்குச் சென்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
