சுனாமியில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்தார் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ
#Mahinda #Shiranthi Rajapaksa
By Vasanth
சுனாமியில் உயிரிழந்த இலங்கையர்களை நினைவுகூர்ந்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று தனது உத்தியோகப்பூர்வ இல்லத்தில் தீபமேற்றி அக வணக்கம் செலுத்தினார்.
முதலில் சுனாமியில் உயிரிழந்தவர்களின் நினைவாக முற்பகல் 9.25 மணிமுதல் முற்பகல் 9.27 வரையான இரு நிமிட நேரம் மௌன அஞ்சலி செலுத்திய பிரதமர், அதனை தொடர்ந்து தீபமேற்றி உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்தார்.
சுனாமி பேரழிவு இடம்பெற்று இன்றுடன் 16 ஆண்டுகளாகின்றன. பேரழிவில் பல அன்புக்குரியர்வர்கள் உயிரிழந்தது மாத்திரமின்றி, அவர்களது இருப்பிடங்களையும் இழந்து, அந்த குடும்பங்களை சேர்ந்த இலட்சக் கணக்கானோருக்கு தங்களது வாழ்க்கையை புதிதாக ஆரம்பிக்கும் நிலை ஏற்பட்டது என இதன்போது பிரதமர் நினைவுகூர்ந்தார்.
குறித்த சந்தர்ப்பத்தில் பிரதமரின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷவும் கலந்து கொண்டிருந்தார்.


மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி