5 மணி நேர விசாரணையின் பின் CCIBயில் இருந்து வெளியேறிய ரோஹித ராஜபக்ச!
புதிய இணைப்பு
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் ரோஹித ராஜபக்ச மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவிலிருந்து வெளியேறியுள்ளார்
ரோஹித ராஜபக்சவிடம் சுமார் 5 மணித்தியாலங்கள் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மிரிஹான பகுதியில் அமைந்துள்ள இரண்டு நிறுவனங்களில் 19 மில்லியன் ரூபாய் முதலீடு செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் தற்போதைய விசாரணைக்காகவே அவர் அங்கு அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முதலாம் இணைப்பு
மகிந்தவின் மகன் ரோஹித ராஜபக்ச CCIBயில் முன்னிலை
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகனான ரோஹித ராஜபக்ச சற்றுமுன்னர் காவல்துறை மத்திய குற்றவியல் விசாரணை பணியகத்திற்கு (CCIB) சமூகமளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வாக்குமூலம் ஒன்றினை வழங்குவதற்காக அவர் அந்த பணியகத்திற்கு சமூகமளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மிரிஹானா பகுதியில் அமைந்துள்ள இரண்டு நிறுவனங்களில் 19 மில்லியன் ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் செய்யப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாகஅவர் அங்கு முன்னிலையாகியுள்ளார்.
வாக்குமூலம் வழங்க அழைப்பாணை

இந்த நிலையில் அந்த இரண்டு நிறுவனங்கள் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் நிதிப் பரிவர்த்தனைகள் குறித்த விசாரணைகளின் ஒரு பகுதியாக, வாக்குமூலம் அளிப்பதற்காக ரோஹித ராஜபக்சவுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 12 மணி நேரம் முன்