தேர்தலில் ரணிலுக்கு ஆதரவு....! மகிந்த வெளியிட்ட தகவல்
அதிபர் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு (Ranil Wickramasinghe) ஆதரவு வழங்குவது தொடர்பில் இன்னும் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என்று சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மொட்டுக் கட்சியின் (Sri Lanka Podujana Peramuna) விசேட கூட்டம் நேற்று (07.5.2024) நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே மகிந்த (Mahinda Rajapaksa) மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
வெற்றி வேட்பாளர்
அத்துடன், வெற்றி வேட்பாளர் ஒருவரையே தமது கட்சி களமிறக்கும் என்றும் அவர் மகிந்த குறிப்பிட்டுள்ளார்.
கட்சியின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச (Basil Rajapaksa) சிறிலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அனைத்து அமைப்பாளர்களும் கொழும்புக்கு நேற்றையதினம் அழைக்கப்பட்டிருந்தனர்.
எதிர்வரும் அரசியல் நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடுவதே இந்த சந்திப்பின் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுகின்றது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |