நாடாளுமன்ற உறுப்பினர் மீது தாக்குதல் மகிந்தானந்த எம்.பி கைது..!
Sri Lanka Police
Mahindananda Aluthgamage
Sri Lanka Podujana Peramuna
By Sumithiran
சக நாடாளுமன்ற உறுப்பினரை தாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே (Mahindananda Aluthgamage)கைது செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாடாளுமன்ற உறுப்பினரால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சக நாடாளுமன்ற உறுப்பினர் குணதிலக ராஜபக்ச (Gunathilaka Rajapaksha )தற்போது இராணுவ வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காலில் எலும்பு முறிவு

அவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதால், அதற்கு இரும்பு தகடு பொருத்தும் அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டுள்ளது.
காவல்துறையில் முறைப்பாடு
இது தொடர்பாக அவரது மகன் கோட்டை காவல்துறையில் முறைப்பாடு அளித்துள்ளார்.

கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய சட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்