தேசியப் பட்டியல் மூலம் நியமிக்கப்படும் முஜிபுர்: விமர்சித்துள்ள மகிந்தானந்த
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானை (Mujibur Rahman) தேசிய பட்டியல் மூலம் நியமிக்க தேர்தல்கள் ஆணைக்குழு அனுமதி வழங்கியமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே (Mahindananda Aluthgamage) விமர்சித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (10) உரையாற்றிய அவர் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் உத்தேசித்துள்ள வேட்பாளர் எவ்வாறு தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்திற்கு நியமிக்கப்பட்டார் என தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கேள்வியெழுப்பியுள்ளார்.
ஊக்குவிக்கும் பணி
உள்ளுராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தேசியப் பட்டியலில் இருந்து நியமனம் செய்யப்பட்டமை தொடர்பில் ஆணைக்குழு மௌனமாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) ஊக்குவிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |