மகிந்த தலைமையில் முக்கிய கலந்துரையாடல்
Mahinda Rajapaksa
Ranil Wickremesinghe
Sri Lanka Podujana Peramuna
By Jaso
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நிறைவேற்று சபையின் விசேட கூட்டம் நாளை (27) காலை 10.00 மணிக்கு முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தலைமையில் கொழும்பிலுள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெறவுள்ளது.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதிநிதிகளுக்கும் அதிபர் ரணிலுக்கும் இடையிலான கலந்துரையாடலின் முடிவுகள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ரணிலுடன் கலந்துரையாடல்
அதிபருக்கும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் கடந்த வாரம் இடம்பெற்றது.

எவ்வாறாயினும், அந்த கலந்துரையாடலில் அதிபர் வேட்பாளர் மற்றும் முதலில் நடைபெறவுள்ள தேர்தல் தொடர்பில் இறுதித் தீர்மானத்தை எட்ட முடியவில்லை. இது தவிர கட்சிக்கான பல குழுக்களை அமைப்பதும் இந்த கூட்டத்தில் செய்யப்படவுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்