மட்டக்களப்பில் மேச்சல் தரைக்காக பண்ணையாளர்கள் பாரிய போராட்டம்!
பல வருடக் கணக்காக தமது மேச்சல் தரைப் பகுதிக்காகப் போராடி வரும் கால்நடை வளர்ப்பு பண்ணையாளர்கள் மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமது நீண்ட கால பிரச்சனைக்குத் தீர்வு காணுமாறு கோரி இன்று வெள்ளிக்கிழமை(14) பாரிய அமைதி வழி போராட்டத்தை அவர்கள் முன்னெடுத்துள்ளனர்.
Mannar Social and Economic Development Organization எனும் அமைப்பின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் இடம்பெற்றுள்ளது.
தீர்வு வழங்குவதில் தாமதம்
இதேவேளை, போரட்டத்திற்கு மேலும் வலுச்சேர்க்கும் முகமாக காணியை இழந்த மன்னார் மக்கள், யாழ்ப்பாணம் வலி வடக்கு மக்கள், முல்லைத்தீவு மாவட்டத்தினுடைய கேப்பாப்பிளவு மக்கள் மற்றும் மைலத்தமடு மாதவனை பண்ணையாளர்கள் என பலர் கலந்து கொண்டுள்ளனர்.

இதன்போது, பண்ணையாளர்கள் தமிழர்கள் என்பதால் தீர்வு வழங்குவதில் தாமதமா? பண்ணையாளர்களின் மேச்சல் தரையைப் பதிவு செய்வதில் ஏன் தாமதம், பல ஆண்டுகள் கடந்தும் மக்களின் காணிகளை ஒப்படைக்க காலம் போதாதா என பல்வேறு வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |





செஞ்சோலையில் 53 மாணவிகளை பலியெடுத்த கொடூரத்தை மறக்கத்தான் முடியுமா? 2 மணி நேரம் முன்