தாமதமாகும் மாகாண சபைத் தேர்தல் : எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை
இலங்கையில் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவது குறித்து ஆய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட விசேட குழுவின் முன் தேர்தல் ஆணைக்குழு அதிகாரிகள் மீண்டும் முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தக் கலந்துரையாடல் எதிர்வரும் 20ஆம் திகதி நடைபெற உள்ளதாகத் தேர்தல் ஆணையாளர் நாயகம் ரசிக்கா பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இதன்போது மாகாண சபைத் தேர்தல்களை எந்த நடைமுறையின் கீழ் நடத்த வேண்டும் என்பது குறித்தும் மேலதிக கலந்துரையாடல்கள் நடைபெறும் என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
சட்டமா அதிபர் திணைக்களத்துடன் கலந்துரையாடல்
மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்கு எந்தத் தேர்தல் முறையைப் பயன்படுத்த வேண்டும் என்பதை ஆய்வு செய்து பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்காக, அமைச்சர் விஜித ஹேரத் தலைமையில் இந்த விசேட குழு அண்மையில் நியமிக்கப்பட்டது.

இந்தநிலையில் குறித்த குழு இதுவரை சட்டமா அதிபர் திணைக்களம் உள்ளிட்ட பல தரப்பினருடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் தேர்தல்கள் ஆணைக்குழுவும் இதற்கு முன்னர் இந்தக் குழுவின் முன் முன்னிலையாக அழைக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
செஞ்சோலையில் 53 மாணவிகளை பலியெடுத்த கொடூரத்தை மறக்கத்தான் முடியுமா? 3 மணி நேரம் முன்