துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் படுகாயம்! விசாரணைகள் தீவிரம்
Sri Lankan Peoples
Sri Lanka Police Investigation
By Dhilak
அம்பாந்தோட்டை வீரகெட்டிய - அக்ரஹாரா பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
இன்று காலை மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த துப்பாக்கிச் சூட்டில் 20 வயதுடைய இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது.
இதன்போது, குறித்த இளைஞரின் தொடைப் பகுதியில் தோட்டா பாய்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலதிக விசாரணை
இந்நிலையில், காயமடைந்த நபர் வீரகெட்டிய வைத்தியசாலையில், அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக தங்காலை ஆதாரா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, சம்பவம் குறித்து வீரகெட்டிய காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி