சிக்கப்போகும் மைத்திரி - கோட்டாபய - CID தரப்பால் கசிந்த தகவல்
2025 ஆம் ஆண்டில் இலங்கையில் அரசியல் மற்றும் ஊழல் தொடர்பான கைதுகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe), 2023-இல் தனது மனைவியின் பட்டமளிப்பு விழாவிற்காக அரச பணம் பயன்படுத்தி லண்டன் சென்ற குற்றச்சாட்டின் பேரில், கடந்த ஓகஸ்ட் 22 அன்று கைது செய்யப்பட்டார்.
பின்னர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இது இலங்கையில் முன்னாள் தலைவரை கைது செய்த முதல் வரலாற்றுச் சம்பவமாகும்.
இதனுடன், பல ஊடகவியலாளர்கள் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்கள் பயங்கரவாதத் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். சமூக ஊடகங்களில் பதிவிட்ட கருத்துக்கள் காரணமாக பலரும் சிக்கியுள்ளனர்.
அதேபோல், ஊழல் வழக்குகளில் இந்த ஆண்டு மட்டும் 60-க்கும் மேற்பட்டோர், அதில் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அவர்களது உறவினர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறான பின்னணியில், உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் மைத்திரிபால சிறிசேனவும் கடத்தல் சம்பவமொன்று தொடர்பில் கோட்டாபய ராஜபக்சவும் விரைவில் விசாரணைக்கு உட்படுத்தப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
ரணிலின் கைதை தொடர்ந்து தெனிலங்கை அரசியல் சூடுபிடித்துள்ளதுடன், எதிர்க்கட்சிகளும் ஒன்றினைந்து புதிய வியூகங்களை அமைத்து வருகின்றது.
இந்த நிலையில் இது தொடர்பாக முழுமையாக ஆராய்கிறது ஐபிசி தமிழின் “செய்திகளுக்கு அப்பால் ”நிகழ்ச்சி...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

