வியட்நாமின் கரையோரப் பிரதேசத்தை தாக்கிய சக்தி வாய்ந்த சூறாவளி
Vietnam
Weather
World
By Raghav
கிழக்கு வியட்நாமின் கரையோரப் பிரதேசத்தை சக்தி வாய்ந்த சூறாவளி தாக்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
இதனையடுத்து, கரையோரப் பகுதியைத் தொடர்ந்தும் பலத்த காற்று வீசுவதுடன், கனமழை பெய்துவருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
சூறாவளி
காஜிகி எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தச் சூறாவளி, மணித்தியாலத்திற்கு 133 கிலோ மீட்டர் வேகத்தில் வீசுவதாக வியட்நாமின் தேசிய வானிலை முன்னறிவிப்பு மையம் தெரிவித்துள்ளது.
காற்றின் வேகம் எதிர்வரும் மணித்தியாலங்களில் குறைந்தாலும், மழையின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் எனவும் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் பாதிப்படைந்துள்ள பிரதேசங்களைச் சேர்ந்த 586,000க்கும் மேற்பட்ட மக்களைத் தமது வீடுகளை விட்டு வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா?
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்