காஸா வைத்தியசாலை மீது இஸ்ரேல் வான்தாக்குதல்
காசா மருத்துவமனை மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 15 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த 2023 ஆம் ஹமாஸ் அமைப்பு, இஸ்ரேலின் மீது தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, இஸ்ரேல் ராணுவம் மற்றும் காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பு இடையே போர் நடைபெற்று வருகிறது.
காசா நகரை கைப்பற்றும் நோக்கில், இஸ்ரேல் ராணுவம் தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.
இஸ்ரேல் ஹமாஸ் போர்
இதன் காரணமாக அங்கு பெருமளவில் உணவு பஞ்சம் ஏற்பட்டுள்ளது. சர்வதேச நாடுகளின் மனிதநேய உதவிகளையும் உள்ளே அனுமதிக்காமல் இஸ்ரேல் தடுத்து வருகிறது.
தற்போது அமெரிக்கா ஆதரவு பெற்ற தொண்டு நிறுவனம் உதவி வழங்கி வரும் நிலையில், உணவு பெற வரிசையில் காத்திருக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதும் தாக்குதல் தொடுத்து வருகிறது.
இந்நிலையில், இன்று தெற்கு காசாவில் உள்ள முக்கிய மருத்துவமனையான நாசர் மருத்துவமனை மீது இரு முறை வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது.
மருத்துவமனை மீது தாக்குதல்
இந்த தாக்குதலில், ராய்ட்டர்ஸ், அசோசியேட் பிரஸ், அல் ஜசீரா, மிடில் ஈஸ்ட் ஐ ஆகிய சர்வதேச செய்தி நிறுவனங்களை சேர்ந்த செய்தியாளர்கள் மற்றும் புகைப்பட கலைஞர்கள் 4 பேர் உட்பட மொத்தம் 15 பேர் உயிரிழந்துள்ளதாக ஹமாஸின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பத்திரிகையாளர்களை குறிவைக்கவில்லை என்றும் மருத்துவமனை மீதான தாக்குதல் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் இஸ்ரேல் பாதுகாப்பு படை(IDF) தெரிவித்துள்ளது.
2023 ஆம் ஆண்டு தொடங்கிய இஸ்ரேல் ஹமாஸ் போரில் இதுவரை 240 க்கும் அதிகமான பத்திரிக்கையாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக பாலஸ்தீனிய பத்திரிகையாளர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

