ரணிலின் உடல்நிலை - கேள்விக்குறியாகியுள்ள விசாரணை
Ranil Wickremesinghe
Sri Lanka
Law and Order
By Raghav
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து வெளியே அழைத்துச் செல்ல முடியாது என மருத்துவ பரிந்துரையில் கூறப்பட்டால், அவரை நாளை (26.08.2025) விசாரணைக்கு அழைத்துச் செல்ல முடியாது என சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் ஜகத் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள ரணில் விக்ரமசிங்க, தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில்(ICU) சிகிச்சை பெற்று வருகின்றார்.
தீவிர சிகிச்சை
அவரது உடல்நிலை குறித்து ஐந்து நிபுணர்கள் கொண்ட மருத்துவர்கள் குழுவால் இன்று (25) பிற்பகல் சிறப்பு அறிக்கை ஒப்படைக்கப்பட்டிருந்தது.
குறித்த அறிக்கையில், ரணில் விக்ரமசிங்கவின் உடல்நிலை திருப்திகரமான நிலைக்குத் திரும்பவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் குழு பரிந்துரைத்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா?
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்