தனது நிலையுடன் கோட்டாபயவை ஒப்பிடும் மைத்திரி
எனக்கு ஏற்பட்ட நிலைமையே, போராட்டக் காலத்தில் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஏற்பட்டது என முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன சபையில் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் அதிபர், பிரதமர் அலுவலகம், நாடாளுமன்றம் உள்ளிட்ட 16 விடயதானங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் குறித்து இடம்பெற்ற குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஈஸ்டர் தாக்குதல் சம்பவம்
2019 ஆம் ஆண்டில் தேசிய பாதுகாப்பு தொடர்பில் கூறிக்கொண்டே தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. தேசிய பாதுகாப்புக்காகவே கோட்டாபய ராஜபக்ஷவை அதிபராக ஆக்குவதாக கூறினர்.
எனது காலத்தில் ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் நடந்தது. அது வெளிநாட்டு ஐஎஸ் அமைப்பினால் செய்யப்பட்டது. அதனை அரசியல் நோக்கத்திற்காக எனது தலையில் போட்டனர். ஆனால் எனக்கு எவரும் தகவல் கூறியிருக்கவில்லை. பாதுகாப்பு அமைச்சரான எனக்கு அந்தத் தகவல்களை கூறியிருக்கவில்லை.
காலிமுகத்திடல் போராட்டம்
இந்நிலையில் கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இதேபோன்ற நிலைமை ஏற்பட்டது. அவர் நாட்டை விட்டு செல்ல இருந்த தினத்தில் குறைந்தளவானவர்களே போராட்டத்திற்கு வருவார்கள் என்று அவரின் பாதுகாப்பு பிரிவினர் கூறியிருந்தனர்.
ஆனால் அன்றைய தினத்தில் 4 இலட்சம் வரையில் மக்கள் கொழும்புக்கு வந்திருந்தனர். இறுதியில் அதிபரால் பதவி விலக நேரிட்டதுடன், பிரதமருக்கு மறைந்து இருக்க வேண்டியேற்பட்டது.
இதனால்
பாதுகாப்பு தரப்பினருக்கு அதிகளவில்
நிதி ஒதுக்குவது முக்கியமல்ல. பாதுகாப்பு
பிரிவை முழுமையாக மறுசீரமைப்பை செய்ய
வேண்டும் என்றார்.
