புதிய கட்சியொன்றை வாங்கும் எண்ணத்தில் மைத்திரி
தேர்தல்கள் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியொன்றை கொள்வனவு செய்ய சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மைத்திரி குழு தயாராகி வருவதாக தென்னிலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தற்போது நிலவும் சட்ட தடைகள் காரணமாக எதிர்காலத்தில் தீவிர அரசியலில் ஈடுபடுவததே இவர்களின் நோக்கம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் அதிபர் சந்திரிக்கா குமாரதுங்க (Chandrika Kumaratunga) நீதிமன்றில் தாக்கல் செய்த மனுவின் பேரில், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ( Maithripala Sirisena) தடை விதிக்கப்பட்டுள்ளது.
ரணிலுக்கு ஆதரவு
அத்தோடு, சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக விஜயதாச ராஜபக்ஷ (Wijeyadasa Rajapakshe) நியமிக்கப்பட்டதை நீதிமன்றம் கண்டித்துள்ள நிலையில், கட்சியின் பதில் தலைவர் நிமல் சிறிபாலட சில்வாவின் (Nimal Siripala de Silva) குழு தற்போது முழு அதிகாரத்தைப் பெற்றுள்ளது.
இதன்படி எதிர்வரும் அதிபர் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க குறித்த குழு ஏற்கனவே தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |