ரணிலுக்கு புகழாரம் சூட்டும் மைத்திரி
நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையை ஸ்திரப்படுத்துவதற்கு அதிபர் ரணில் விக்ரமசிங்க மேற்கொண்ட முயற்சிகளுக்கு முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன பாராட்டு தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய சிறிசேன, அதிபர் விக்ரமசிங்க நாடு எதிர்கொண்டுள்ள கடுமையான நெருக்கடியிலிருந்து நாட்டை ஓரளவுக்கு மீட்டெடுத்துள்ளார் என்று கூறினார்.
பொதுஜன பெரமுனவின் அழுத்தம்
எவ்வாறாயினும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) சில வகையான அழுத்தங்களை அதிபர் எதிர்கொள்ள நேரிடும், இது ஒரு பிரச்சினையாக இருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை புத்துயிர் பெற முயற்சிப்பது தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்த மைத்திரிபால சிறிசேன, தற்போதைய சூழ்நிலையில் எவ்வாறு புத்துயிர் பெற எதிர்பார்க்கின்றார்கள் என நகைச்சுவையாக கேள்வி எழுப்பினார்.
அரசியல் மேடைகளில் எவரும் ஏறலாம்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மறுமலர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியவர் மஹிந்த ராஜபக்ஷ என கருத்து தெரிவித்த முன்னாள் அதிபர், “அரசியல் மேடைகளில் எவரும் ஏறலாம், பிச்சைக்காரனாலும் இதைச் செய்ய முடியும்” என்றார்.
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)