மைத்திரி தூக்கில் இடப்பட வேண்டும் - இராஜாங்க அமைச்சர் ஆவேசம்!
2019 Sri Lanka Easter bombings
Easter
Maithripala Sirisena
Easter Attack Sri Lanka
By Pakirathan
ஈஸ்டர் குண்டுத் தாக்குதலில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டமைக்கு முன்னாள் அதிபர் மைத்திரி உள்ளிட்ட குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்டு கொலை செய்யப்பட வேண்டும்.
இவ்வாறு, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தரும் இராஜாங்க அமைச்சருமான சனத் நிஷாந்த கூறியுள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மைத்திரி - தூக்கில்

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலை தடுக்கத் தவறியமை தொடர்பில், முன்னாள் அதிபர் மைத்திரிக்கு நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தண்டனை போதாது எனவும், இதை விட கடுமையான தண்டனை அவருக்கு வழங்கப்பட வேண்டும் என அமைச்சர் சனத் நிஷாந்த வலியுறுத்தியுள்ளார்.
அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதை வேடிக்கை பார்த்ததற்கு அவரைத் தூக்கில் இட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
5ம் ஆண்டு நினைவஞ்சலி