மைத்திரிக்கு எதிரியான இருவர் : அவரே வெளியிட்ட தகவல்
சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர மற்றும் முன்னாள் இராணுவத் தளபதி, நாடாளுமன்ற உறுப்பினர் சரத்பொன்சேகா இருவரும் தனக்கு எதிரி என முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அவர்கள் இருவரும் எனது கொள்கைகளுக்கு உட்படாதவர்கள் என்பதால் அவர்கள் இருவருக்கும் நான் பொது எதிரியாக மாறிவிட்டேன் எனவும் அவர் தெரிவித்தார்.
ஒழுக்காற்று சபை சட்ட நடவடிக்கை
அண்மையில் கங்காராமய ஆலய நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போது ஊடகவியலாளர் ஒருவரால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தயாசிறிக்கு எதிராக சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் ஒழுக்காற்று சபை சட்ட நடவடிக்கை எடுக்கும் என மைத்திரி தெரிவித்தார்.
நாங்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யவில்லை. ஆனால் தயாசிறி தான் எங்களுக்கெதிராக நீதிமன்றம் சென்றார்.
எனவே அவர் வழக்கை மீளப்பெற்று விட்டு எம்முடன் பேசலாம். குற்றப்பத்திரிகையிலுள்ள விடயங்களை பேசித் தீர்மானித்து மீண்டும் எம்முடன் அவர் பணி புரியலாம். அதில் எந்தத் தடங்கலும் இல்லை என மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.